ரஷ்ய அதிபர் புதின் நினைத்தால் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்கி வருகிறார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வதிகாரி என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் இந்த சூழல் குறித்து பேசியுள்ள டிரம்ப், உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி பங்கேற்க வேண்டும் என அவசியம் இல்லை என கூறினார்.
பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தங்கள் செய்வதை ஜெலன்ஸ்கி தடுத்து நிறுத்துகிறார் எனவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.