காங்கிரஸ் கட்சியில் தமது பொறுப்பு குறித்து தெளிவுபடுத்துமாறு ராகுல் காந்தியிடம் எம்.பி. சசி தரூர் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியை புகழ்ந்தது, அமெரிக்க அதிபர் உடனான சந்திப்பு போன்ற எம்.பி. சசி தரூரின் நடவடிக்கைகள் மீது ராகுல் காந்தி அதிருப்தி அடைந்துள்ளதாகவும், இதனால் கட்சியில் சசி தரூரின் பொறுப்பு குறித்து அவர் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், கட்சியில் தமது பொறுப்பு குறித்து தெளிவுபடுத்துமாறு ராகுல் காந்தியிடம் அவர் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கட்சியில் அங்கீகாரம் கிடைக்காதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.