ராமநாதபுரத்தில் சமூக ஆர்வலர் தாக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், குவாரி உரிமையாளர்களை சமூக ஆர்வலர் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சாலை கிராமம் பகுதியில் நீதிமன்ற தடையை மீறி மணல் அள்ளிய சிலர் மீது, புகாரளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராதாகிருஷ்ணனை காரில் கடத்திச் சென்ற சிலர், சரமாரியாக தாக்கிவிட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக அவரை நேரில் சந்தித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மணல் குவாரி உரிமையாளர்களை 3 லட்சம் ரூபாய் பணம் கேட்டு ராதாகிருஷ்ணன் மிரட்டும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.