திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் இல்லை என செவிலியர் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிப்பதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் இல்லை என்றும், மணப்பாறை மருத்துவமனைக்கு செல்லுமாறும் செவிலியர் தெரிவித்துள்ளார்.