தருமபுரி பேருந்து நிலையத்தில் இரு இளம் பெண்கள் சக பயணிகளிடமும், ரோந்து பணியில் இருந்த காவலர்களிடமும் வம்பிழுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு பேருந்து நிலையம் வந்த இரு இளம் பெண்கள் அங்கிருந்த பயணிகளை தகாத முறையில் பேசி வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. இ
து பற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் பயணிகள் புகார் அளித்த நிலையில், விசாரிக்க முற்பட்ட காவலர்களிடமும் அந்த இளம்பெண்கள் தாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும், முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்றும் தகாத முறையில் பேசியுள்ளனர்.
இதனால் காவலர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், மதுபோதையில் இருப்பவர்களைப்போல் நடந்துகொண்ட இளம் பெண்களின் செயல் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க செய்தது.