ஊழலுக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை உடைத்தவர் இன்று அதே ஊழல் கூடாரத்தில் இளைப்பாறி கொண்டிருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை தவெக மறைமுகமாக விமர்சித்துள்ளது.
ரசிகர்கள் யாரும் வாக்காளர்களாக மாற மாட்டார்கள் என விஜய்யை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள தவெக செய்தி தொடர்பாளர், எந்த ஊழல் கூடாரத்திற்கு எதிராக டிவி பெட்டியை உடைத்தாரோ தற்போது சுயநலத்திற்காக அதே கூடாரத்தில் கமல் இளைப்பாறுவதாக விமர்சித்துள்ளார்.
பணி ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் பணிகளை மேற்கொண்டால் இது தான் நிலை என கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ள தவெக, இனியாவது ஆளும் பிக் பாஸ்களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் எனவும் தெரிவித்துள்ளது.