புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை தகர சீட்டுகளால் மூடி மறைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஏடி காலனி சுடரொளி நகர் மக்கள் சார்பில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல் பட்டா இடத்திலும் சிலையை வைக்கக் கூடாது என வருவாய் துறை அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நடத்திய பேச்சுவார்த்தையின்போது, சிலை வைப்பதற்கு அனுமதி கடிதம் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும், அதுவரை சிலையை சம்பந்தப்பட்ட மக்களே மூடி மறைத்து வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து,தகர சீட்டுகளைக் கொண்டு அம்பேத்கர் சிலையை மூடி மறைத்து வைத்தனர்.