சென்னை கொடுங்கையூரில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இளைஞர்களை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்த சாய்ராம், சென்னை கொடுங்கையூரில் வசிக்கும் இப்ராஹிம் என்பவரோடு இணைந்து அண்ணா நகரில் இரவுநேர தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார்.இரவு வியாபாரம் முடித்துவிட்டு கொடுங்கையூருக்கு இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, காரில் வந்த மர்மகும்பல் அவர்களை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும், பணம் தர மறுத்த அவர்களை, காரில் துரத்தி சென்று உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்த நிலையில், மர்மகும்பல் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.