பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா நேரில் சென்று சந்தித்துள்ளார்.
பிரதமர் இல்லத்தில் அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. டெல்லி முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக ரேகா குப்தா, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
குறிப்பாக டெல்லி பட்ஜெட் தாக்கலுக்கு முன் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி மேம்பாடு குறித்து இருவரும் பேசியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.