போபால் – டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு சேதமடைந்த இருக்கை கொடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை சேதமடைந்து இருந்தது தெரியவந்தது என தெரிவித்துள்ளார்.
சக பயணிகள் இருக்கையை மாற்றி நல்ல இருக்கையில் அமரும்படி தன்னை வற்புறுத்தினார்கள் எனவும் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
ஆனால் வேறு எந்த நபருக்கும் தொந்தரவு கொடுக்க கூடாது என்பதால் சேதமடைந்த இருக்கையிலேயே அமர்ந்து பயணம் செய்தேன் எனவும் சிவராஜ் சிங் சௌகான் குறிப்பிட்டுள்ளார்.