அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனில் பணியாற்றும் 5 ஆயிரத்து 700 தற்காலிக ஊழியர்களை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தவாரம் முதல் பெண்டகனில் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து குறைக்கப்படுவர் என்று டிரம்ப் அரசு அறிவித்துள்ளது.
அரசின் செலலினங்களை குறைக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.