சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 15 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மாபெரும் சாதனை படைக்க உள்ளார்.
இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 298 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 286 இன்னிங்ஸ்களில் களம் இறங்கி 13 ஆயிரத்து 985 ரன்கள் அடித்துள்ளார்.
இதில் 50 சதம் மற்றும் 73 அரைசதம் ஆகியவை அடங்கும். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விராட் கோலி மேலும் 15 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 14,000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டு வீரர்களாக சச்சின் மற்றும் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.