தங்கள் நாட்டு பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை சேர்ந்த 4 பேரை சிறைபிடித்து வைத்திருந்தது. அவர்கள் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், பாதுகாவலர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டனர் என ஹமாஸ் தெரிவித்தது.
இந்நிலையில் அதில் ஷிரி பிபாஸ் என்பவரது உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்தது டிஎன்ஏ பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட யாருடைய மரபணுவும், அந்த உடலுடன் ஒத்துபோகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.