தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது.
சென்னையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்த்த விவகாரத்தில் 4 பேரை கைது செய்த தேசிய புலனாய்வு பிரிவு போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து வழக்கில் தொடர்புடைய அல்பாசித் அமீன் என்பவர் நாகையில் கைது செய்யப்பட்டார். அல்பாசித் அமீனை காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் மனு அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அல்பாசித் அமீனை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தனர்.