திருப்பத்தூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமலே இருந்த மேம்பாலத்தை, பொதுமக்களே திறந்து பயன்படுத்த தொடங்கினர்.
திருப்பத்தூர் மாவட்டம் சோமநாயக்கன்பட்டி ரயில்வே மேம்பாலம் 26 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், மேம்பாலம் இதுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் புதிய மேம்பாலத்தை பொதுமக்களே கற்பூரம் ஏற்றி திறந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.