அமெரிக்க பெண்ணுடன் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த இளைஞருக்கு, திருச்சியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் ஹரி கிருஷ்ணன் என்பவருக்கும், அந்நாட்டை சேர்ந்த சனம் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.
இதனையடுத்து, இருவீட்டு சம்மதத்துடன் திருச்சியில் இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மணப்பெண்ணின் உறவினர்கள் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.