தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஏப்ரலில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பெயரளவிற்கே பராமரிப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொள்வதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புனரமைப்பு பணிகள் முடிவதற்கு 6 மாத காலம் ஆகும் என்பதால், முழுமையாக பணிகள் நிறைவு பெற்ற பின்னரே கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.