வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமையையொட்டி கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் சூரியன் உதிக்கும் காட்சியை திரிவேணி சங்கமம், சன்செட் பாயிண்ட், பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் ஆகிய பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து பரவசமடைந்தனர்.
மேலும், கடல் அலைகளோடு விளையாடியும், குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.