திருப்பூர் அருகே சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் பேக்கரியை அடித்து நொறுக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
போயம்பாளையத்தில் சந்தான குமார் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு சனிக்கிழமை இரவு மது போதையில் வந்த இளைஞர்கள் சிகரெட் வாங்கி உள்ளனர்.
அப்போது வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தர மறுத்து கடை ஊழியர்களை தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.