திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார்.
கொடைக்கானல் குப்பம்மாள்பட்டி அருகே உள்ள குன்றுகாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமை, அவரை கடுமையாக தாக்கியுள்ளது.
இதில், படுகாயமடைந்த முருகேசன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.