நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் நாளை முதல் மார்ச் 1ஆம் தேதி வரை புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளதால் அகத்தியர் மற்றம் மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மார்ச் 3ஆம் தேதி முதல் வனசோதனை சாவடி திறக்கப்பட்டு வழக்கம் போல், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் கூறப்பட்டுள்ளது.