திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பில் மாநில அளவிலான பெண்கள் கபடி தொடர் நடத்தப்பட்டது.
நாங்குநேரி டோல்கேட் அருகே 2 நாட்கள் இந்த கபடி போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து 25 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
இதில், நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது. கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த பி.கே.ஆர் கல்லூரி 2ஆம் இடம் பிடித்தது. முதலிடம் பிடித்த அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்ட நிலையில், போட்டிகளை காண 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்தனர்.