கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைக் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால், சடலத்தை, கிராம மக்கள் டோலி கட்டி சுமந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
நெல்லித்துறை ஊராட்சியில் கடம்பன்கோம்பை பகுதியை சேர்ந்த மணி என்ற கூலித் தொழிலாளி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது.
ஆனால் நீராடியில் இருந்து கடம்பன்கோம்பை பகுதிக்கு சாலை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு டோலி கட்டி சடலத்தை சுமந்து சென்று தகனம் செய்தனர்.