மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மகா சிவாரத்திரியை முன்னிட்டு மகா கும்பமேளாவிற்கு தொடர்ந்து வருகை தரும் அதிகளவிலாபக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபாடு மேற்கொண்டனர்.