திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா, அதிமுகவினர் சார்பாக தமிழக முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், 77 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.