ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 11 தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு ஒற்றை தலைமையே காரணம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில், ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
வசந்த காலமாக இருந்த அதிமுகவை யார் மாற்றியது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் என்றும், அவர்களின் பெயரை எல்லாம் வருங்காலத்தில் தவிர்க்க வேண்டிய கட்டாயச் சூழல் உள்ளதாகவும் கூறினார்.
மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்று இபிஎஸ்-ஐ கடுமையாக ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்தார்.