திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாயில் இருந்து எல்இடி பல்பை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
தூத்துக்குடியை சேர்ந்த 3 வயது சிறுவன் விகான், விளையாடும் போது எல்இடி பல்பை தவறுதலாக விழுங்கியதால், மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கிய எல்இடி பல்பை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெறும் 20 நிமிடத்தில் அகற்றினர்.
இதேபோல சில மாதங்களுக்கு முன் அந்தோணி என்ற நபர் திறந்த நிலையில் இருந்த ஊக்கை விழுங்கியதால், மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதையும் அறுவை சிகிச்சை மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனை அகற்றினர்.