கடையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடையம் அருகே பங்களா குடியிருப்பு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் காட்டு யானை கூட்டம் புகுந்தது. தடுப்பு வேலியை உடைத்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதாகவும், காவலுக்கு இருந்தவர்கள் டார்ச் லைட் அடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.