கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை அருகே கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில் அவரது மனைவி ஹிமி, 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், காலை 8 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ஹிமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.