கன்னியாகுமரியில் பாறை மீது நின்று செல்பி எடுத்த இளைஞர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவிலில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்துவிட்டு, கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் சிலர், காந்தி மண்டபம் பின்புறம் தடை செய்யப்பட்ட மரணபாறை பகுதிக்கு சென்று பாறையில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் என்ற இளைஞர், கால் தவறி கடலில் விழுந்து மாயமானார்.
இதையடுத்து, மீனவர்கள் உதவியுடன் கடலோர பாதுகாப்பு குழு போலீசார், இளைஞரை தேடி வருகின்றனர்.