டெல்லி சட்டசபைக்கு புதிதாக சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் அதிஷி ஆகியோர், அவரை அழைத்து கொண்டு சென்று நாற்காலியில் அமர வைத்தனர்.
சட்டசபையின் 8-வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட விஜேந்தருக்கு, முதலமைச்சர் ரேகா குப்தா வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பின்னர் பேசிய அவர், விஜேந்தர் குப்தா வழிகாட்டுதலின் கீழ் இந்த சட்டசபையானது, நல்ல முறையில் நடைபெறும் என்ற முழு நம்பிக்கை தனக்கு உள்ளது என கூறினார்.