தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 19வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பீகார் மாநிலம் பகல்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வாகனப் பேரணியாக வந்த பிரதமர் மோடிக்கு விவசாயிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடி, கிசான் உதவித் தொகைக்கான 21 ஆயிரத்து 500 கோடி ரூபாயை நிதியை விடுவித்தார்.
பின்னர் மேடையில் பேசிய பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவில் விவசாய பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, ஏற்றுமதியால், விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களுக்கு அதிக விலையைப் பெறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.