பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, ரயில்வே பெண் காவலர் ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு ஆடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம்,பழநி ரயில்வே காவல் நிலையத்தில் கடந்த 7 ஆண்டுகளாக முதல்நிலை பெண் காவலராக பணிபுரிந்து வரும் ஒருவர், தற்போது திருச்சி ரயில்வே நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெண் காவலர், திருச்சி ரயில்வே எஸ்.பி-க்கு ராஜினாமா கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. பாலியல் அத்துமீறலை எதிர்த்து கேட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும், அதிகாரிகளின் பழி வாங்கும் போக்கு காரணமாகவே வேலையை ராஜினாமா செய்தததாகவும் கூறி ஆடியோ வெளியிட்டுள்ளார்.