இந்திய நிறுவனம் ஒன்றின் வலி நிவாரணி மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருளை போல பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனமானது வலி நிவாரணி மாத்திரைகளை தயாரிக்கின்றன. அந்த மாத்திரையில் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க மூளை மற்றும் முதுகெலும்பில் செயல்பட்டு நரம்புகளை தளர்த்தும் தீங்கிழைக்கக் கூடிய மருந்துக் கலவை இடம்பெற்றுள்ளது.
இவை மலிவான விலையில் கிடைப்பதால் சட்டவிரோதமாக மேற்கு ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனையடுத்து அந்த மருந்துக்கான உற்பத்தியை அனைத்து மாநிலங்களும் திரும்பப் பெறுமாறு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.