நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூரில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சண்டி ஹோம உற்சவத்தின் ஒரு பகுதியாக நடந்த முளைப்பாரி திருவிழாவில், ஏராளமான பெண்கள் விரதமிருந்து முளைப்பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, கும்மியடித்தும், குலவையிட்டும் பெண்கள் வழிபாடு நடத்தினர்.
சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.