கேரளாவில் காதலி உள்பட 6 பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் இளைஞர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
கேரளா மாநிலம் பெருமலை பகுதியை சேர்ந்த அஃபான் என்ற இளைஞர், பணம் கேட்டு கொடுக்காத காரணத்தால், தனது பாட்டி, பெரியம்மா, காதலி, உள்ளிட்ட 6 பேரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார்
6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வெஞ்சாரமூடு காவல் நிலையத்தில் அஃபான் சரணடைந்தார்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்டவர்களின் வீடுகளை சீல் வைத்த அவர்கள், விடிய விடிய ஆதாரங்களை சேகரித்தனர்.