தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தாளப்பள்ளம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மகேஸ்வரி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.