நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி குறித்து தகவல் தெரிவிக்காத இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களை கோட்டாட்சியர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி 200-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.