சென்னை நந்தனத்தில் Prestige Polygon ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நந்தனம் அண்ணா சாலையில் பிரபல கட்டுமான துறை நிறுவனமான Prestige Polygon இயங்கி வருகிறது. இங்கு காலை 8 மணிக்கு வந்த 5 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.
அதன்படி அந்நிறுவன உயர் அதிகாரிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோதனை நிறைவடைந்த பிறகு வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது.