கன்னியாகுமரியில் இரும்பு மனிதன் கண்ணன் தலா 70 கிலோ எடைகொண்ட 4 இளைஞர்களை தூக்கிக்கொண்டு, 30 மீட்டர் தூரம் ‘யோக்வாக்’ முறையில் நடந்து சாதனை படைத்துள்ளார்.
மேல் கிருஷ்ணன் புதூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாடி பில்டர் கண்ணன், போதையில்லா தமிழகத்தை உருவாக்கவும், உடலை வலிமையாக வைத்திருக்கவும் வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.