நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் வங்கி கட்டடத்திற்கான சொத்துவரியை செலுத்ததால், அந்த வங்கி மற்றும் அதற்கு அருகில் வாடகைக்கு இருக்கும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியார் வங்கி அமைந்துள்ள கட்டடம் மற்றும் காதிகிராஃப்ட் கட்டடத்திற்கான சொத்துவரி சுமார் 30 லட்ச ரூபாயை கட்டட உரிமையாளர் நகராட்சிக்கு செலுத்தவில்லை என தெரிகிறது.
இதற்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்தும் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.