புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மண்ணவேளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களும் விளையாடி கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்து எலி ஸ்பிரேவை கண்டெடுத்துள்ளனர். மேலும், அதனை முகத்தில் அடித்து கொண்டு விளையாடியபோது எலி ஸ்பிரேயின் நுரை சிறுவர்களின் வாயில் சென்றுள்ளது.
இது குறித்து அறிந்த பெற்றோர்கள் உடனடியாக சிறுவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.