புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்கி விரைந்து பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஏழு மாவட்ட மக்களின் நூறாண்டு கோரிக்கையான காவிரி, வைகை இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் முழக்கமிட்டனர்.