நீலகிரி மாவட்டத்தில் வறட்சி காலம் தொடங்கியதால் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வனப் பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வறட்சி காலத்தில் தீ பரவும் அபாயம் இருப்பதால் டிரக் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், நீலகிரி வனக்கோட்டத்தில் 100 கிலோ மீட்டர் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரம் தீ மூட்டி சமையல் செய்ய கூடாது என அவர் அறிவுறுத்தினார்.