ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு இயந்திரமே முடங்கும் சூழல் ஏற்பட்டது.
சேலத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால் உரிய சேவைகளைப் பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், ஆசிரியர்கள் வராமல் அரசு பள்ளிகளும் வெறிச்சோடியதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இதேபோல ஈரோட்டிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.