கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழியை அழிப்பதற்கு பதிலாக திமுகவினர் ஆங்கில மொழியை அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு சென்ற திமுகவினர், பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்தனர்.
இதேபோல் தென்காசியில் உள்ள கடையநல்லூர் ரயில் நிலையத்திற்கு சென்ற திமுகவினர், இந்தி எழுத்துக்களை அழிப்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களை அழித்தனர்.