மகா சிவராத்திரியை ஒட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாசி பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களை ஒட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வரும் 28ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதோஷ நாளான இன்று மலையேறி கோயிலுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சிவராத்திரி அன்று விடிய விடிய பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.