கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மனைவி மற்றும் மகளுடன் நாகர்கோவிலில் நடைபெற்ற புத்தக கண்காட்சியை காண சென்றுள்ளார்.
பின்னர், 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். கருமாவிளை பகுதியில் சென்றபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி மற்றும் மகள் படுகாயமடைந்தனர்.