சிறுமுகை பவானி ஆற்றில் இருந்து விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்த செல்லும் கிணறுகளில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து கிணற்றில் நிரப்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
சமீப நாட்களாக ஆலாங்கொம்பு பகுதியில் தண்ணீர் மாசடைந்து வந்த நிலையில், அதனை விவசாய கிணறுகளில் நிரப்பும்போது துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த தண்ணீரில் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. பவானி ஆற்றில் என்ன மாதிரியான நச்சு கலந்துள்ளது என்பதை அதிகாரிக்ள கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.