ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் திருவிழா காலங்களில் சாமி வீதி உலா வருவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் கடந்த 18ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளாலும், சாலையோரம் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் சுவாமி வீதி உலா வருவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, திருவிழாக்காலங்களில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் காவலர்களை பணியமர்த்தி கோயில் ரதவீதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவிடாமல் தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.